< Back
மாநில செய்திகள்
புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
மாநில செய்திகள்

புகையில்லா போகி பண்டிகை : பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்

தினத்தந்தி
|
12 Jan 2024 6:26 PM IST

காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை.

புகையில்லா போகி பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர், டியூப் ஆகியவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கபப்ட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் 24 மணி நேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்