விருதுநகர்
200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் திட்டம்
|200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் திட்டத்தை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
அங்கன்வாடி மையம்
விருதுநகர் அருகே உள்ள கருப்பசாமி நகர் அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்திடும் பொருட்டு தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு ஸ்மார்ட் டி.வி. வழங்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த செயல்பாடுகளுக்கு வழங்கப்பட்ட ஆயோக் ஜிகா நிதியினை பயன்படுத்தி விருதுநகர் மாவட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் முன் பருவ கல்வி கற்கும் திறனை அதிகரிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஸ்மார்ட் டி.வி.
இந்த திட்டத்தின் கீழ் 200 அங்கன்வாடி மையங்களை ஸ்மார்ட் அங்கன்வாடி மையங்களாக மாற்றம் செய்திடும் வகையில் 200 அங்கன்வாடி மையங்களுக்கு 50 அங்குல ஸ்மார்ட் டி.வி., ஸ்டெப்ளைசர், பென்டிரைவ் போன்றவற்றை கலெக்டர் மேகநாத ரெட்டி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.