< Back
மாநில செய்திகள்
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.100-ஐ தாண்டிய சின்ன வெங்காயம்
மாநில செய்திகள்

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் கிலோ ரூ.100-ஐ தாண்டிய சின்ன வெங்காயம்

தினத்தந்தி
|
18 Oct 2022 10:08 PM IST

ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.100-ஐ தாண்டியது

ஒட்டன்சத்திரம்,

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கடந்த ஆறு மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தது.

இந்த நிலையில் சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால், கடந்த நான்கு நாட்களாக விலை அதிகரித்து கானப்பட்டது. 4 நாட்களுக்கு முன் கிலோ ரூ.60 ஆக இருந்த சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது பழைய சின்னவெங்காயத்தை இருப்பு வைத்திருந்த விவசாயிகள் இந்த விலையேற்றத்தினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்