< Back
மாநில செய்திகள்
வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை
கரூர்
மாநில செய்திகள்

வரத்து குறைவால் சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனை

தினத்தந்தி
|
14 Oct 2023 12:18 AM IST

வரத்து குறைவால் கரூரில் 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனையாகிறது.

வரத்து குறைவு

கரூர் பஸ்நிலையம் அருகே தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில் கரூர் தினசரி மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. வரத்துகுறைவால் சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.110-க்கு விற்பனையாகிறது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.120-க்கு விற்பனையான சின்ன வெங்காயம், அதன்பிறகு விலை படிப்படியாக குறைந்து 1 கிலோ ரூ.60-க்கு விற்பனையானது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு 1 கிலோ சின்னவெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது.

இந்நிலையில் நேற்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.110-க்கு விற்பனையானது. இதேபோல் பீன்ஸ் 1 கிலோ ரூ.140-க்கும், கோழி அவரைக்காய் 1 கிலோ ரூ.160-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பீன்ஸ் 1 கிலோ ரூ.80-க்கும், கோழி அவரைக்காய் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

கேரட் ரூ.70

கரூர் தினசரி மார்க்கெட்டில் விற்பனையாகும் மற்ற காய்கறிகளின் விலை விவரம் (1 கிலோ) வருமாறு:- பெரிய வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50-க்கும், ஊட்டி உருளைகிழங்கு ரூ.60-க்கும், உருளைகிழங்கு ரூ.30-க்கும், கத்திரிக்காய் ரூ.40-க்கும், வெண்டைக்காய் ரூ.40-க்கும், பட்டை அவரைக்காய் ரூ.100-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், கொத்தவரங்காய் ரூ.50-க்கும், பீட்ரூட் ரூ.80-க்கும், கேரட் ரூ.70-க்கும், புடலங்காய் ரூ.40-க்கும், முள்ளங்கி ரூ.70-க்கும், பீர்க்கங்காய் ரூ.60-க்கும், சவ்சவ் ரூ.50-க்கும், தக்காளி ரூ.20-க்கும், முருங்கைக்காய் ரூ.70-க்கும், முட்டைக்கோஸ் ரூ.30-க்கும், பூசணிக்காய் ரூ.25 முதல் ரூ.30-க்கும், பரங்கிக்காய் ரூ.30-க்கும் விற்பனையாகின்றன.

இதுகுறித்து மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது, சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை உயர்ந்துள்ளது. மற்ற காய்கறிகளின் விலையை பொறுத்தவரை கடந்த 10 நாட்களுக்கு முன்பு குறைந்திருந்தது. தற்போது சற்று உயர்ந்துள்ளது, என்றனர்.

மேலும் செய்திகள்