< Back
மாநில செய்திகள்
சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை
விருதுநகர்
மாநில செய்திகள்

சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை

தினத்தந்தி
|
19 Oct 2023 5:22 AM IST

ஸ்ரீவில்லிபுத்தூரில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனையானது. இதன் விலை சற்று அதிகரித்து தற்போது ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து வியாபாரி கிருஷ்ணன் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன ெவங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் சின்னவெங்காயம் விருதுநகர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. தற்போது வெங்காயம் 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை ெசய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக வெங்காயம் விலை ஏற்றம் பெற்றுள்ளது. வரத்து அதிகரித்து விட்டால் விலை சீராக வாய்ப்பு உள்ளது. அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு 1 கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை ஆனது. தற்போது விலை சரிந்து ரூ.15-க்கு விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்