< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம்
|7 Sept 2023 10:59 PM IST
வந்தவாசியில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே சிறுதானிய விழிப்புணர்வு ஊர்வலத்தை உணவு பாதுகாப்பு அலுவலர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்கள் சிறுதானிய உணவுகளை அனைவரும் சாப்பிட வேண்டும், சிறுதானியம் உணவுகள் உடலுக்கு மிகவும் அவசியம் உள்பட பல்வேறு வாசகங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
ஊர்வலம் வந்தவாசி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பஜார் வீதி, தேரடி, காந்தி சாலை வழியாக சென்று பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.