< Back
மாநில செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பக்கூடாது
கடலூர்
மாநில செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பக்கூடாது

தினத்தந்தி
|
29 Aug 2022 6:53 PM GMT

விநாயகர் சிலை ஊர்வலத்தில் கோஷங்கள் எழுப்பக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கினர்.

நெல்லிக்குப்பம்,

விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லிக்குப்பம் மற்றும் நடுவீரப்பட்டு பகுதியில் விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடும் பக்தர்களுக்கான ஆலோசனை கூட்டம் நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சீனுவாசன் தலைமை தாங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், சிலைகள் வைக்கப்படும் இடங்களில் சிலைகளுக்கு பாதுகாப்பாகவும், எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் இரும்பு தகடுகள் கொண்டு கூரைகள் அமைக்க வேண்டும். மின் வாரியத்திற்கு தெரியாமல், கொக்கி போட்டு மின்சாரம் எடுக்கக்கூடாது. சிலைக்கான முழு பாதுகாப்புக்கும், சிலை வைத்தவர்களே பொறுப்பாவர். பட்டாசு உள்பட அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகள் வெடிக்கக்கூடாது. மசூதிகள் இருக்கும் பகுதிகளில் விநாயகர் ஊர்வலங்கள் செல்லும் போது கோஷங்கள் எழுப்பவோ, வன்முறையை தூண்டும் வகையில் பேசவோ கூடாது என்றார். இதில் நெல்லிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா, நெல்லிக்குப்பம் மின்வாரியம் கிராம உதவி மின்பொறியாளர் (பொறுப்பு) பிரமியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்