சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?
|நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னை,
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் நேற்று முன் தினம் வரை தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,360-க்கும், ஒரு கிராம் ரூ.6,670-க்கும் விற்று வந்த நிலையில், நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.6,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.53,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 2.50 ரூபாய் குறைந்து ரூ.89.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.