< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன..?

11 May 2024 10:42 AM IST
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
சென்னை,
அட்சய திருதியை தினமான நேற்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,240 அதிகரித்த நிலையில் ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து 6,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.