< Back
மாநில செய்திகள்
சற்று குறைந்த மீன்விலை - அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி
மாநில செய்திகள்

சற்று குறைந்த மீன்விலை - அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
26 Jun 2022 3:38 PM IST

வாரவிடுமுறையை ஒட்டி காசிமேடு மீன்சந்தை களை கட்டியுள்ளது.

சென்னை,

வாரவிடுமுறையை ஒட்டி காசிமேடு மீன்சந்தை களை கட்டியுள்ள நிலையில், மீன்களின் விலை சற்று குறைந்ததால், அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வார விடுமுறை தினமான இன்று மீன் வாங்க ஏராளமான அசைவ பிரியர்கள் குவிந்ததால் காசிமேடு மீன்சந்தை களைகட்டியுள்ளது. மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை ஒட்டி கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த விசைப்படகுகளில் ஏராளமானவை கரை திரும்பியதால் மீன்வரத்து அதிகரித்து மீன்விலை சற்று குறைந்துள்ளது.

இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் வவ்வால், வஞ்சிரம் போன்ற பெரிய மீன்கள் அதிக அளவு கிடைக்காதது அவர்களுக்கு சற்று ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. மீன் சந்தையில் இன்று வஞ்சிரம் 1 கிலோ ரூ. 1100க்கும் தேங்காய் பாறை 1 கிலோ ரூ. 700க்கும் விற்பனையாகி வருகிறது.

பர்லா கிலோ ரூ. 380க்கும் சங்கரா, தோல்பாறை ஆகியவை கிலோ ரூ. 300க்கும் விற்பனையாகி வருகிறது. கடம்பா கிலோ ரூ. 280க்கும் வெள்ளை ஊடான் கிலோ ரூ. 100க்கும் நெத்திலி கிலோ ரூ. 100ல் தொடங்கி விற்பனையாகிறது. இறால், நண்டு ஆகியவை கிலோ ரூ. 350ல் தொடங்கி விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்