அசந்து தூங்கிய பெற்றோர்: 6 மாத குழந்தையை கடத்திய பெண் - ஓசூர் பஸ் நிலையத்தில் பரபரப்பு
|ஓசூர் பஸ் நிலையத்தில் கடத்தப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
ஓசூர்,
ஓசூர் பஸ் நிலையத்தில் கடத்தப்பட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 6 மாத பெண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த தம்பதியர் ஒருவர், ஓசூரில் உள்ள ரோஜா தோட்டத்தில் பணிபுரிவதற்காக ஓசூர் பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். இரவு நேரம் என்பதால் பஸ் நிலையத்திலேயே தங்களது 6 மாத குழந்தையுடன் தூங்கியுள்ளனர்.
அப்போது அதிகாலையில், மர்ம நபர் ஒருவர் அவர்களது 6 மாத குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். குழந்தை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். பின்னர் போலீசார் பல குழுக்களாக பிரிந்து, குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கக் கூடிய வகையில், பெண் ஒருவர் குழந்தையுடன் செல்வதைக் கண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பெங்களூருவை சேர்ந்த அப்பெண் குழந்தையை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அப்பெண் ராஜேஸ்வரியை கைது செய்த போலீசார், குழந்தையை மீட்டு பெற்றோரிடத்தில் ஒப்படைத்தனர்.