< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து: காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக புகார்...!
|6 April 2023 1:35 PM IST
காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக போலீசில் புகார் அளித்துள்ளது.
சென்னை,
தமிழக பாஜகவில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பேசியும், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டும் வருகிறார்.
இந்த நிலையில், காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக போலீசில் புகார் அளித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சமூக வலைதளத்தில் அவதூறு கருத்து பரப்பி வரும் காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை சைபர் கிரைம் போலீசில் தமிழக பாஜக சார்பில் புகார் அளித்துள்ளனர்.