< Back
மாநில செய்திகள்
ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து  அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா
தேனி
மாநில செய்திகள்

ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா

தினத்தந்தி
|
29 July 2022 4:33 PM GMT

ஆண்டிப்பட்டியில் பேரூராட்சி கூட்டத்தை புறக்கணித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் உள்ள 3, 4, 7, 13, 15 ஆகிய வார்டுகளில் அ.தி.மு.க.வினர் கவுன்சிலர்களாக உள்ளனர். இந்த வார்டுகளில வளர்ச்சி திட்ட பணிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்றும் கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆண்டிப்பட்டி பேரூராட்சி கூட்டம் நடந்தது. அப்ேபாது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பு செய்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சின்னச்சாமி பாண்டியன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கடந்த 5 மாதமாக தங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. பேரூராட்சிகள் உதவி இயக்குனர் நேரடியாக வந்து தங்கள் குறைகளை கேட்டு சரி செய்ய வேண்டும். அதுவரை தாங்கள் அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கவுன்சிலர்கள் கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்