< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
29 April 2023 12:24 AM IST

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெரம்பலூரை அடுத்த வாலிகண்டபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் 2 நாட்கள் நடந்தது. இதில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதல் நாள் நிகழ்ச்சியில் பெரம்பலூர் வரலாற்று நூலாசிரியர் ஜெயபால்ரத்தினம், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மற்றும் ரஞ்சன்குடி கோட்டையின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசினார். பெரம்பலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் கவுரவ செயலாளரும், ஓய்வுபெற்ற கல்வி அலுவலருமான ஜெயராமன் மாணவர்களிடையே கணிதம் கற்கும் திறனை மேம்படுத்திட சுடோகு கணித புதிர்கள் குறித்து பேசினார். துறையூரை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வேணுகோபால், புதிர் கணக்குகள் சிலவற்றை விளக்கி பேசினார். மேலும் கணித வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாலையில் நடந்த கைவினைத்திறன் பயிற்சியில் கைவினை ஆசிரியர்கள், கலைப்பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரி தமிழ் பேராசிரியர் படைப்பாற்றலை வளர்ப்போம் என்ற தலைப்பில் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதுதல், எழுத்தாக்க திறனை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கி சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் லதா மற்றும் ஆசிரியர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்