< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
வேலூர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
3 Sep 2022 6:19 PM GMT

பிட்ஜி குளோபல் பள்ளியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

காட்பாடி பிட்ஜி குளோபல் பள்ளியில் ஒளிமயமான எதிர்காலத்துக்கான நல்லிணக்கம் மற்றும் வசதிகளுடன் வாழ்வதற்கு நமது சுற்றுப்புறத்தை சிறந்த இடமாக அடுத்த தலைமுறைக்கு எவ்வாறு மாற்றுவது என்ற கருத்தை மையமாக கொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. பள்ளி முதல்வர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக வி.ஐ.டி. பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியை அனிதாதேவி கலந்து கொண்டு பேசினார்.

இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 7 முதல் 15 வயதுக்குட்பட்ட 180-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியில், இயற்கை வளங்களை பாதுகாப்பது, பழங்கால குடும்ப சமூக முறைகள், கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், உறவினர்களுடன் பழகும் முறைகள் குறித்து மாணவர்கள் பேச்சுத்திறன் மூலம் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்