திருவண்ணாமலை
கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
|ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
ஆரணியில் கல்லூரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட பயிற்சி நிறுவனங்கள், 150-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பயிற்சி படிப்புகளில் ஏழை மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டு திட்ட பயிற்சி நடைபெற்று வருகிறது.
ஆரணியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள் இடையே தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி கணினி வழி மூலம் நடைபெறுகிறது.
கலெக்டர் ஆய்வு
இப்பயிற்சி பெறும் மாணவர்களிடத்தில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்து அவர்களுடைய திறன்களை, கேள்விகள் எழுப்பி தெரிந்து கொண்டார்.
அப்போது கல்லூரி முதல்வர் என்.திருநாவுக்கரசு, துணை முதல்வர் ஆர்.வெங்கடரத்தினம் மற்றும் துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி, ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.