< Back
மாநில செய்திகள்
கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

தினத்தந்தி
|
13 Jan 2023 12:15 AM IST

கட்டுமான ெதாழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்கள விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


கட்டுமான ெதாழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் வாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்கள விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி

இது குறித்து சிவகங்கை மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு கட்டுமான கழகத்தின் மூலமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒரு வாரகால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி குழாய் பொருத்துபவர், மரவேலை கம்பி வளைப்பவர், தச்சு தொழிலாளி மற்றும் சாரம் கட்டுபவர் ஆகிய தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து 3 ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊக்கத்தொகை

விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ படித்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டு 40 வயதுக்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறும் அனைவருக்கும் எல்.டி. நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்புபவர் தங்கள் நலவாரிய அட்டை, கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் சிவகங்கை காஞ்சிரங்காலில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்