< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்குதிறன் மேம்பாட்டு பயிற்சி
|10 July 2023 12:15 AM IST
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
காணை,
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. மாணவர்களின் உடல்நலம் மற்றும் மனநலம் எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா, ஆசிரிய பயிற்றுனர்கள் சுபாஷ், இவாஞ்சலின், கவிதா மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர்.