< Back
மாநில செய்திகள்
முன்னாள் படை வீரர்களுக்கு திறன் வளர்ச்சி திட்ட பயிற்சி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

முன்னாள் படை வீரர்களுக்கு திறன் வளர்ச்சி திட்ட பயிற்சி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
31 Aug 2023 6:25 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் திறன் வளர்ச்சி திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ள அனைத்து முன்னாள் படைவீரர்களும் திறன் வளர்ச்சி திட்டத்தில் கைபேசி பழுது நீக்குதல், கார் மெக்கானிக், ஏ.சி., குளிர்சாதனப்பெட்டி பராமரிப்பு, எலக்ட்ரீசியன், பிளம்பிங், டிரைவர் பயிற்சி, மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல், பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு, கணினி-தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுது பார்த்தல் போன்ற தொழிற்பயிற்சிகளில் சேர்ந்து பயனடையுங்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்