< Back
மாநில செய்திகள்
துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

துப்பாக்கி சுடுதல் போட்டியில் சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை

தினத்தந்தி
|
11 Oct 2023 2:14 AM IST

துப்பாக்கி சுடுதல் போட்டியில் சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளி மாணவர் சாதனை படைத்து உள்ளார்.

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜா விமல் அலெக்ஸ் பாண்டியன் தேசிய அளவில் போபாலில் நடைபெற உள்ள துப்பாக்கி சுடுதல் போட்டியில் (ஏர் பிஸ்டல்) கலந்து கொள்ள தமிழ்நாடு அளவில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவரது சாதனையை பள்ளி செயலாளர் காமராஜ், முதல்வர் மரியஹெலன் சாந்தி மற்றும் அனைத்து ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும் செய்திகள்