< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை பா.ஜ.க. தலைவர் கைது
மாநில செய்திகள்

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை பா.ஜ.க. தலைவர் கைது

தினத்தந்தி
|
23 Jun 2024 9:59 PM IST

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை,

போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளரை தகாத வார்த்தையால் திட்டியதாக சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நகர பா.ஜ.க. தலைவராக இருப்பவர் உதயா. இவர் இன்று காலை காரில் சென்றபோது, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்போது அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பெண் சார்பு ஆய்வாளர் அழகு ராணி சீட் பெல்ட் அணியாதது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து இது தொடர்பாக உதயாவுக்கும் சார்பு ஆய்வாளர் அழகு ராணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது உதயா, அழகு ராணியை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உதயா தகாத வார்த்தைகளால் திட்டியதாக வீடியோ ஆதாரத்துடன் சார்பு ஆய்வாளர் அழகு ராணி புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சிவகங்கை காவல் நிலையம் முன்பு பா.ஜ.க. நிர்வாகிகள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்