< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சீதா, ராமர் திருக்கல்யாணம்
|14 May 2023 11:35 PM IST
சீதா, ராமர் திருக்கல்யாணம் நடந்தது.
தவுட்டுப்பாளையம் அக்ரஹாரத்தில் நேற்று காலை வெங்கடேச பாகவதர் குழுவினரின் பஜனை பாடல் நிகழ்ச்சியும், தொடர்ந்து உஞ்சவிருத்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது, பின்னர் சீதா, ராமர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி சீதா மற்றும் ராமருக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அதனை தொடந்து மதியம் பக்தர்களுக்கு அறுசுவை அன்னம் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை ஆஞ்சநேயர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.