< Back
மாநில செய்திகள்
அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்
மாநில செய்திகள்

அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
5 Sept 2023 2:44 PM IST

பணி நியமனம் வழங்கக்கோரி சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை,

சென்னை ஐ.சி.எப்.-ல் அப்ரண்டீஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி வழங்கக் கோரி சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக ஐ.சி.எப்.-ல் பயிற்சி பெற்றவர்களுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாகம் பணி நியமனம் வழங்கவில்லை என்றும், இதனால் சுமார் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த 20-ந்தேதி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டது. இருப்பினும் தற்போது வரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை எனக்கூறி இன்றைய தினம் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்