< Back
மாநில செய்திகள்
உறவினர் விபத்தில் சிக்கியதாக அழைத்துச்சென்று அக்காள், தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்
மாநில செய்திகள்

உறவினர் விபத்தில் சிக்கியதாக அழைத்துச்சென்று அக்காள், தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்

தினத்தந்தி
|
20 March 2024 5:28 AM IST

பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 பேர் கொண்ட கும்பலை தேடிவருகின்றனர்.

விருதுநகர் ,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் எனது தங்கை வீட்டுக்கு சென்ற போது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம் வந்து உங்களது மாமா விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளார் என கூறினார். அதை நம்பி நாங்கள் இருவரும் அவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றோம். அவர் எங்களை, வாழ்வாங்கி பகுதியில் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஏற்கனவே 4 பேர் நின்றிருந்தனர். திடீரென அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கினர். மேலும் எங்களை அங்கிருந்த 4 பேரும் மிரட்டி கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, மேற்கண்ட 4 பேரின் கூட்டாளியாக ராஜ்குமார் இருந்துள்ளார் என்பதும், அவர்கள் ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி விரட்டிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜ்குமார், பாலு, மற்றொரு ராஜ்குமார், சுந்தரமகாலிங்கம், கனி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்