< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சிறுவாபுரி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்
|29 Sept 2023 6:39 PM IST
சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியலில் ரூ.48 லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது.
சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் தொகை என்னும் பணி நடைபெற்றது.
சோழிங்கநல்லூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, சிறுவாபுரி முருகன் கோவிலின் செயல் அலுவலர் பிரகாஷ் மேற்பார்வையில் காணிக்கை என்னும் பணி நடைபெற்றது.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இப்பணி நடைபெற்றது. இதில், ரொக்கம்பணம் ரூ.48 லட்சத்து 62 ஆயிரத்து 109-ம், 54 கிராம் 690 மில்லி கிராம் தங்கம், 3 கிலோ 780 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக கிடைக்கப்பெற்றது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.