< Back
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
31 May 2023 3:01 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டும் கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்கியது. இதில் 5-ம் நாள் திருவிழாவான வன்னியர் குல சத்திரியர்களால் நடத்தப்படும் நாச்சியார் திருக்கோலம், யாதவ சமூகத்தினால் நடைபெற்ற 6-ம் நாள் உற்சவமான யானை வாகனம் உற்சவம் பிரமாண்டமாக நடைபெறும்.

இதற்கு அடுத்தபடியாக 7-ம் நாள் திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7.30 மணியளவில் தாயாருடன் நரசிம்ம பெருமாள் தேரில் நான்கு மாட வீதியில் தாரை, தப்பட்டை வாத்தியங்கள் முழங்க வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழாவில் மனித நேயத்தை போற்றும் வகையில் முஸ்லிம் சமூகத்தினர். 4 ஆயிரம் பேருக்கு குடிநீர் பாட்டில், 3 ஆயிரம் பேருக்கு நீர் மோர், 2 ஆயிரம் பேருக்கு குளிர்பானம், ஆயிரம் பேருக்கு ரஸ்னா வழங்கினார்கள்

தேரோட்டத்தையொட்டி சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடேசன், ஆய்வாளர் பாஸ்கர் மேலாளர் தமிழ் செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்