< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மாநகர பஸ்கள் ,மெட்ரோ, புறநகர் ரெயில்களில் ஒரே பயணச்சீட்டு - முதல் அமைச்சர் இன்று ஆலோசனை
|17 Nov 2022 8:33 AM IST
ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ்கள் , சென்னை மெட்ரோ ரெயில் , புறநகர் ரெயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை,
சென்னையில், ஒருங்கிணைந்த பெ ருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கூட்டம் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காலை , சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் நடைபெறுகிறது
கூட்டத்தில், மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பலவகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும் முயற்சியாக நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ்கள் , சென்னை மெட்ரோ ரெயில் , புறநகர் ரெயில் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்தும் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.