செங்கல்பட்டு
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா
|சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோவில் பல்லவர் காலத்து குடவரை கோவில்களில் ஒன்று. இந்த கோவில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவிலாகும். பாடலாத்ரி என்றால் சிவப்பான குன்று என்று பொருள்படும.
இங்குள்ள மூலவர் குகையின் உள்ளே பர்வதமே திருமேனியாக உள்ளார். ஆகையால் சாமியை வலம் வர வேண்டும் என்றால் சிறிய குன்றையும் சேர்த்து தான் வலம் வர வேண்டும்.
இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் இந்த கோவிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.
அது போல இந்தத ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விடையாற்றி அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷங்களை எழுப்பினார்கள் இதனை தொடர்ந்து காலை, மாலை சூரிய பிரபை வாகனம், ஹம்ச வாகனம், கருட சேவை, ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், நாச்சியார் திருக்கோலம், (யாளி வாகனம்), யானை வாகனம், தேர் உற்சவம், குதிரை வாகனம், புஷ்ப பல்லக்கு, தொடர்ந்து ஐந்து நாட்கள் விடையாற்றிஉற்சவம் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் க.வெங்கடேசன், ஆய்வாளர் ந.பாஸ்கரன், மேலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் செய்து வருகின்றனர்.