< Back
மாநில செய்திகள்
சிங்கார வேலன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கார வேலன் கோவில் ஆடி கிருத்திகை திருவிழா

தினத்தந்தி
|
24 July 2022 1:56 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலைய சாலையில் உள்ள சிங்கார வேலன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலைய சாலையில் சிங்கை சிங்காரவேலன் கோவில் உள்ளது. அங்கு ஆடிகிருத்திகை திருவிழா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. மாலை அணிந்து விரதமிருந்த பக்தர்கள் 108 பேர் சிங்கப்பெருமாள் கோவில் குளக்கரையிலிருந்து பால்குடங்களை தலையில் சுமந்துக்கொண்டு ஊர்வலமாக வந்து முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனையும், அக்னிசட்டி எடுத்தல், மிளகாய்பொடி அபிஷேகம், மஞ்சள் இடித்தல், தீ மிதித்தல், 108 வேல் குத்துதல், காவடி எடுத்தல், ரதம் இழுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் விரதமிருந்து செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்