< Back
மாநில செய்திகள்
சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா

தினத்தந்தி
|
29 Jan 2023 3:52 PM IST

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பழமைவாய்ந்த பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலில் ரத சப்தமி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் நரசிம்ம பெருமாள் உற்சவ கோலத்தில் சூரியபிரபை, கருடசேவை, சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், புண்யகோடி விமானம், சேஷ வாகனம், சந்திரபிரபை ஆகிய 7 வாகனங்களில் பத்தர்களுக்கு அருள்பாலித்தவாறு நான்கு மாடவீதிகளில் திருவீதி உலா வந்தார்.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்