< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினேக் பாபு போக்சோ சட்டத்தில் கைது
சென்னை
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினேக் பாபு போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
16 Jun 2023 11:00 PM IST

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினேக் பாபு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

செங்குன்றம் அடுத்த சோழவரம் பகுதியை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதமாக இவர் பள்ளிக்கு சென்று வரும்போது சோழவரம் அடுத்த வழுதிகை மேடு, ஞாயிறு கிராமத்தை சேர்ந்த பாபு என்கிற ஸ்நேக்பாபு (25) அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளிலில் அமர வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் தாய் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து `ஸ்நேக்' பாபுவை போகோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது சோழவரம் போலீஸ் நிலையத்தில் 7 வழக்குகள் உள்ளன. குற்றச்செயல்களில் ஈடுபடும்போது பொதுமக்களிடமும் போலீசாரிடமும் சிக்காமல் பாம்புபோல் வேகமாக தப்பி செல்வதால் பாபுவை அவரது நண்பர்கள் ஸ்நேக்பாபு என்று அழைத்து வந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்