< Back
மாநில செய்திகள்
ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம்

தினத்தந்தி
|
12 Sept 2022 6:52 PM IST

தென்னிந்திய அளவில் குண்டூரில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது

ஜோலார்பேட்டை


தென்னிந்திய அளவில் குண்டூரில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டறம்பள்ளி மாணவிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது

ஆந்திர மாநிலம் குண்டூரில் 33-வது தென்னிந்திய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9-ந் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதல் போட்டியில் தமிழக அணி சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கீர்த்திகா பங்கேற்றார். இவர் நாட்டறம்பள்ளி அருகே உள்ள எல்லப்பள்ளி பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரது மகள் ஆவார்.

இவர் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 37.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். இதனையொட்டி மாணவி கீர்த்திகாவுக்கு அவர் பயிற்சி பெற்ற நாட்டறம்பள்ளி எஸ்.கே.வி.எஸ்.ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நிர்வாகி மதன் குமார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மாணவிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உள்பட பொதுமக்கள் பாராட்டி வாழ்த்த்தினர்.


மேலும் செய்திகள்