< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ரூ.13 லட்சம் பட்டுக்கூடுகள் விற்பனை
|2 Jun 2022 8:53 PM IST
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.13 லட்சம் பட்டுக்கூடுகள் விற்பனை நடைபெற்றது.
தர்மபுரி:
தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 722 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2490 கிலோவாக அதிகரித்தது. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடுகள் அதிகபட்சமாக ரூ.698-கவும், குறைந்தபட்சமாக ரூ.358-கவும், சராசரியாக ரூ.556.19 என்ற விலைகளில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.13 லட்சத்து 85 ஆயிரத்து 170 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை ஆனது.