< Back
மாநில செய்திகள்
விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி
தர்மபுரி
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி

தினத்தந்தி
|
18 Feb 2023 12:30 AM IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நாகலூர் கிராமத்தில் நடந்தது. பயிற்சியை பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முனிகிருஷ்ணன் தொடங்கி வைத்ததுடன், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் வேளாண்மை துறையில் உள்ள மானிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குனர் முருகன் கலந்து கொண்டு பட்டுப்புழு உற்பத்தியில் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள், தோட்ட பராமரிப்பு மற்றும் புழு வளர்ப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார்.

இளநிலை ஆய்வாளர்கள் கனகவேல், சங்கீதா ஆகியோர் துறை ரீதியான மானிய திட்டங்கள் பற்றி பேசினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் விவசாயிகளுக்கு உழவன் செயலி பதிவிறக்கம் செய்யும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், மனோஜ் குமார் உள்பட 40 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்