< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில்பட்டு வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி14-ந் தேதி நடக்கிறது
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில்பட்டு வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி14-ந் தேதி நடக்கிறது

தினத்தந்தி
|
9 Jun 2023 7:00 PM GMT

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியரும், தலைவருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 14-ந் தேதி காலை 10 மணிக்கு பணம் கொழிக்க பட்டு வளர்ப்பு, நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. அதில் பட்டு செடி மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு, பட்டு வளர்க்க அரசின் மானிய திட்டங்கள், பட்டு செடியில் தோன்றக்கூடிய பூச்சிகள், நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள், பட்டுபுழு வளர்ப்பு, அறை அமைத்தல், அதில் ஏற்படும் இடர்பாடுகள், அதற்கான தீர்வுகள், பட்டு கூண்டு சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பட்டு வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் பட்டு வளர்ப்பு தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது

மேலும் செய்திகள்