< Back
மாநில செய்திகள்
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபர் - தேடும் பணி தீவிரம்
சென்னை
மாநில செய்திகள்

சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபர் - தேடும் பணி தீவிரம்

தினத்தந்தி
|
11 Feb 2023 6:56 PM IST

சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மாங்காடு அடுத்த சிவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்ற விஜயகுமார் (வயது 34). இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரிக்கு சென்றவர் மோட்டார் சைக்கிளை கல்குவாரியின் மீது நிறுத்திவிட்டு திடீரென கல்குவாரியில் இருந்த குட்டையில் குதித்தார்.

இதனை கண்டதும் அங்கு இருந்த பொதுமக்கள் தீயணைப்பு போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

கல்குவாரியில் குதித்த விஜயகுமாரை ரப்பர் படகு மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுவதாலும் ஆழம் அதிகமாக இருப்பதாலும் விஜயகுமாரை தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை மெரினாவில் உள்ள நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கல்குவாரியில் இறங்கி விஜயகுமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதிலும் அவர் கிடைக்காத நிலையில் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்தனர். அவர்களும் ரப்பர் படகு மூலம் பிரத்யேக கருவிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து நீரில் மூழ்கிய விஜயகுமாரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கல்குவாரியில் அதிக அளவில் நீர் நிறைந்து காணப்படுவதால் தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்