< Back
மாநில செய்திகள்
நில உரிமையாளரை மிரட்டி கையெழுத்து - அ.தி.மு.க., பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கைது
மாநில செய்திகள்

நில உரிமையாளரை மிரட்டி கையெழுத்து - அ.தி.மு.க., பா.ம.க. நிர்வாகிகள் 3 பேர் கைது

தினத்தந்தி
|
29 March 2024 9:32 PM IST

நில உரிமையாளரை காரில் கடத்திச் சென்று, பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, நில உரிமையாளரை காரில் கடத்திச் சென்று தாக்கி, பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய சம்பவத்தில், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாலமுரளி வீரண்ணகுப்தா என்பவருக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி சேகர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாலமுரளி வீரண்ணகுப்தாவை, தனது நண்பர்களான அ.தி.மு.க. நிர்வாகி குமரன் மற்றும் பா.ம.க. நிர்வாகி ஜெயக்குமாருடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்ற சேகர், அவரைத் தாக்கி பத்திரங்களில் கையெழுத்து வாங்கியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்