< Back
மாநில செய்திகள்
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம்

தினத்தந்தி
|
22 May 2023 11:37 PM IST

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பெரம்பலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி த.மா.கா. இளைஞரணி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் தொடர்ந்து 3 நாட்கள் நடந்தது. இதனைத்தொடர்ந்து கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் வேல்முருகன் தலைமையில், மாவட்ட தலைவர் கிருஷ்ணன்ஜனார்த்தன், மாநிலக்கொள்கை பரப்பு செயலாளர் சுப்பிரமணியன், இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை இணைத்து கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர். இதனை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று பூரண மதுவிலக்கை அமல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் தமிழகத்தை குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு வலியுறுத்தியதாக அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்.

மேலும் செய்திகள்