< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
கையெழுத்து இயக்கம்-கோரிக்கைகளை விளக்கி பிரசாரம்
|28 March 2023 12:15 AM IST
கையெழுத்து இயக்கம்-கோரிக்கைகளை விளக்கி பிரசாரம் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதி கிராம குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் மற்றும் கோரிக்கைகள் விளக்க பிரசார இயக்கம் நடத்தப்பட்டது. இதற்கு கம்யூனிஸ்டு கட்சி மூத்த நிர்வாகி பரமசிவம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு செங்குந்தபுரம் கிராம பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து வீடு வீடாக நேரில் சென்று குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. முடிவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.