அரியலூர்
அடிப்படை வசதிகள் கேட்டு கையெழுத்து இயக்கம்
|அடிப்படை வசதிகள் கேட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அப்பகுதி கிராம குடியிருப்பு மக்களுக்கு அடிப்படை வசதிகள் நகராட்சி நிர்வாகம் செய்து தர கேட்டு கையெழுத்து இயக்கம் மற்றும் கோரிக்கைகள் விளக்கி பிரசார இயக்கம் கம்யூனிஸ்டு கட்சி மூத்த நிர்வாகி பரமசிவம் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு செங்குந்தபுரம் கிராம பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் பற்றி விரிவாக விளக்கி பேசினார். தொடர்ந்து ஆட்டோ மூலம் பிரசாரம் செய்து வீடு வீடாக நேரில் சென்று குடியிருப்பு வாசிகள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதில் குடியிருப்பு வாசிகள் 630 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு கையெழுத்து பெறப்பட்ட மனுக்களை ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் மூர்த்தியிடமும், வட்டாட்சியர் துரையிடமும் வழங்கப்பட்டது.