< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
|28 Nov 2022 2:53 AM IST
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
மாவட்ட சமூகநலத்துறை சார்பில் சர்வதேச பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான தீவிர விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 25-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம்(டிசம்பர்) 10-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது. கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொடங்கி வைத்து, பெண்கள் மீதான வன்கொடுமைக்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க, அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட சமூகநல அலுவலர் நித்யா, பெண்கள் பாதுகாப்பு அலுவலர் புளோரா மார்கரெட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.