சேலம்
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்
|சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை டி.எம்.செல்வகணபதி தொடங்கி வைத்தார்.
எடப்பாடி
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடியை அடுத்த நைனாம்பட்டி பகுதியில் தனியார் அரங்கில் நீட்விலக்கு கையெழுத்து இயக்கம் நடந்தது. மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி முதல் கையெழுத்து இட்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மருத்துவத்துறை சார்ந்தோர், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வாசகங்கள் அடங்கிய தபால் அட்டையில் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் பெட்டியில் போட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் சம்பத்குமார், சுந்தரம், எடப்பாடி நகர்மன்ற தலைவர் டி.எஸ்.எம். பாஷா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.ஏ.முருகேசன், பூவா கவுண்டர், ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, பேரூராட்சி தலைவர்கள் சுந்தரம், அழகுதுரை, அர்த்தநாரீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.