திருவண்ணாமலை
ஓய்வூதியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம்
|போளூரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
போளூர்
போளூரில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க போளூர் வட்ட கிளையின் சார்பில் செயற்குழு கூட்டம் மற்றும் லட்சம் ஓய்வூதியரிடம் கையெழுத்து பெறும் இயக்க தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு போளூர் வட்ட ஓய்வூதியர் சங்க தலைவர் அபிபுல்லாகான் தலைமை தாங்கினார். மத்திய இணைச் செயலாளர்கள் மல்லிகா, செழியன், முகமது கவுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டத்துணை தலைவர் கே.பாலு வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் பி.கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12-ந் தேதி கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, லட்சம் ஓய்வூதியர்களிடம் கையெழுத்து பெறுவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் நிர்வாகிகள் சி.ஜெகநாதன், மா.குப்புசாமி, அ.உதயகுமார், சி.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் பொருளாளர் ச.ராமலிங்கம் நன்றி கூறினார்.