< Back
தமிழக செய்திகள்
முற்றுகை போராட்டம்
திருநெல்வேலி
தமிழக செய்திகள்

முற்றுகை போராட்டம்

தினத்தந்தி
|
3 Sept 2022 2:40 AM IST

பாளையங்கோட்டையில் தமிழர் உரிமை மீட்பு களத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழர் உரிமை மீட்பு களம் அமைப்பினர் பாளையங்கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்மண்டல அமைப்புச் செயலாளர் கணேசபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாவீது பாண்டியன், மாநகர செயலாளர் சரவணன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். திராவிட தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் முற்றுகை போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டும் மூலைக்கரைப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற பெருமாள்நகர் மகளிர் சுய உதவி குழுவினர் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. அதை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் துரைப்பாண்டியன், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழரசு, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் நிஜாம், பூர்வீக தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் பாலமுருகன், மக்கள் அதிகாரம் மாவட்ட பொறுப்பாளர் கின்சன், வனவேங்கை கட்சி மாவட்ட செயலாளர் சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்