< Back
மாநில செய்திகள்
சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
29 April 2024 12:03 AM IST

சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி,

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம்நாயர் (வயது 72) சித்தா டாக்டரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னா (வயது 60)

இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மகனும் சித்தா டாக்டராக பணியாற்றி வருகிறார். வயதான தம்பதி இருவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சித்தா டாக்டரான சிவம் நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாக கிடந்துள்ளனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பார்த்து இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது சிவம்நாயர் அவரது மனைவி பிரசன்னா ஆகிய இருவரும் வீட்டுக்குள் கழுத்தில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். கொலை செய்து விட்டு நகை, பணம் திருடப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

வயதான சித்தா டாக்டர் அவரது மனைவி இருவரும் வீட்டிற்குள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்