< Back
மாநில செய்திகள்
போலீசில் காட்டி கொடுத்ததாக 3 வியாபாரிகளுக்கு அரிவாள் வெட்டு -  2 ரவுடிகள் கைது
மாநில செய்திகள்

போலீசில் காட்டி கொடுத்ததாக 3 வியாபாரிகளுக்கு அரிவாள் வெட்டு - 2 ரவுடிகள் கைது

தினத்தந்தி
|
15 Jun 2022 9:57 PM IST

சென்னையில் போலீசில் காட்டி கொடுத்ததாக 3 வியாபாரிகளை அரிவாளால் வெட்டிய ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

சென்னை மணலி சர்.வி.சி ராமன் தெருவை சேர்ந்த மாரியப்பன்(வயது65), ராஜா( 41) மளிகை கடை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சிவா(21). இவர் தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

நேற்று இவர்கள் கடைக்கு வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் போலீசில் எங்களை காட்டிக்கொடுப்பீர்களா என கேட்டு மாரியப்பன், ராஜா, சிவா ஆகியோரை அரிவாளில் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

மாரியப்பனுக்கு வலது கையில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. ராஜாவுக்கு தலையில், சிவாவுக்கு, நெற்றியில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மணலி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன்(எ) குள்ளமணி(24), சுகுமார்(22) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

பாதிக்கப்பட்ட வியாபாரிகளை, வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் வெள்ளையன், மணலி வியாபாரி சங்க தலைவர் டி. ஏ. சண்முகம், வடசென்னை மாவட்ட தலைவர் வியாசை மணி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்