< Back
மாநில செய்திகள்
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மாநில செய்திகள்

கூடங்குளம் முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தினத்தந்தி
|
30 Jan 2024 2:22 PM IST

வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது.

இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் எரிபொருட்கள் நிரப்பும் பணிக்காக நேற்று காலை 5.30 மணியளவில் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த பணிகள் இன்னும் ஓரிரு மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது.

எனினும் இரண்டாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்