நாமக்கல்
எருமப்பட்டி, கபிலர்மலை பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
|எருமப்பட்டி, கபிலர்மலை பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எருமப்பட்டி
எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிபட்டி அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம் கோம்பை, காவக்காரபட்டி, பவித்திரம் புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிபட்டி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பாண்டமங்கலம், கபிலர்மலை
இதேபோல் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கபிலர்மலை, சிறுகிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், மாணிக்கநத்தம், பஞ்சப்பாளையம், சேளூர் செல்லப்பம் பாளையம், பெரியமருதூர், சின்னமருதூர், பாகம்பாளையம், பெரியசோளிபாளையம், சின்னசோளிபாளையம், தண்ணீர்பந்தல், அண்ணாநகர், வீரணம்பாளையம், கொளக்காட்டுப்புதூர், நெட்டையம்பாளையம், எஸ்.கொந்தளம், பொன்மலர்பாளையம், காளிபாளையம், ஆனங்கூர், சாணார்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை செயற்பொறியாளர்கள் நாகராஜன், வரதராஜன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.