< Back
மாநில செய்திகள்
படைவீடு, பல்லக்காபாளையம் பகுதிகளில்  நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
நாமக்கல்
மாநில செய்திகள்

படைவீடு, பல்லக்காபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
11 Oct 2022 12:15 AM IST

படைவீடு, பல்லக்காபாளையம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

குமாரபாளையம்:

சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சங்ககிரி மேற்கு துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ெரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னா கவுண்டனூர், வெப்படை, சவுதாபுரம், பாதரை, அம்மன் கோவில், மக்கிரிபாளையம், முதலைமடையானூர், திருநகர் பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், எக்ஸல் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்