< Back
மாநில செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் பகுதிகளில்இன்று மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:30 AM IST

அரூர்:

பாப்பிரெட்டிப்பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் கூட்ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, மெணசி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, முக்காரெட்டிப்பட்டி, சமத்துவபுரம், இருளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதேபோல் அரூர் துணை மின் நிலையத்திலும் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரிநகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரிச்சபட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பே.தாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, முத்துகவுண்டர் நகர், எல்லபுடையாம்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை செயற்பொறியாளர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்